உடலை சுற்றி வளைத்த மலைப்பாம்பு... தைரியமாக பிடித்த நபர்!... வைரல் காட்சி

Report
274Shares

கிணற்றுக்குள் இருக்கும் மலைப்பாம்பை பிடிக்க வனத்துறை ஊழியர் ஒருவர் கிணற்றுக்குள் இறங்கு வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரளாவின் திருச்சூர் அருகே உள்ள பெராமங்கலம் என்ற பகுதியில் உள்ள கிணற்றுக்குள் மலைப்பாம்பு ஒன்று உள்ளதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்து வந்த சாகில் என்ற வனத்துறை ஊழியர், கிணற்றுக்குள் துணிச்சலாக கயிறு மூலம் இறங்கி பாம்பை பிடிக்க முயற்சித்தார்.

நீண்ட நேர போராட்டத்திற்கு பின் பாம்பை பிடித்து மேலே ஏறும் போது, பாம்பு அவரின் உடலை சுற்றி வளைத்துள்ளது. அதன் பின்னும் விடாமல் ஒரு கையில் பிடித்தவாறே கயிற்றை பிடித்து ஏறினார்.

அப்போது திடீரென பாம்புடன் அவர் நிலை தடுமாறு கிணற்றுகுள் விழுந்துள்ளார். மறுபடியும் நீண்ட முயற்சிக்கு பின் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர்.

இதுபற்றி பேசிய சாகில், “முதலில் கன்னி வைத்து பிடிக்க முயற்சித்தோம். ஆனால், கிணறு ஆழமாக இருந்ததால் அதில் சிக்கல் இருந்தது. எனவே, கீழே இறங்கி பாம்பை பிடிக்க முயற்சித்தேன்” என தெரிவித்தார்.

இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி சாகில் என்பவரின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.

9858 total views