நடிகை ஸ்ரேயாவை சுற்றி வளைத்த லண்டன் பொலிசார்.. பதற்றமடைந்த படக்குழுவினர்கள்...!

Report
552Shares

நடிகை ஸ்ரேயா படப்பிடிப்பின் போது லண்டன் பொலிசார் சுற்றி வளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஸ்ரேயோ நடிகர் விமலுடன் சண்டக்காரி திரைப்பட்டதில் நடித்து வருகிறார்கள். இந்த படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைப்பெற்று, வருகிறது.

இந்நிலையில், ஒரு சில காட்சிகள் லண்டனில் விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் அனுமதிப்பெற்று படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, விமான நிலையத்தில் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் ஸ்ரேயா தெரியாமல் சென்றுள்ளார். அப்போது அந்தப்பகுதியில் காவலுக்கு இருந்த துப்பாக்கி ஏந்திய பொலிசார் அவரை சுற்றி வளைத்து விசாரணை செய்துள்ளனர்.

படப்பிடிப்பு குழுவினரும் பொதுமக்களும் இந்த பகுதிக்கு வரக்கூடாது என்பது விதியாக இருக்கும் போது நீங்கள் எப்படி இந்த பகுதிக்கு பகுதி வரலாம் என அவரை கேள்விகளால் துளைத்து எடுத்து விசாரணை செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை ஸ்ரேயா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பதற்றத்தில் இருந்தார்

அதன் பின், அங்கே வந்த படக்குழுவினர் தாங்கள் படப்பிடிப்புக்காக பெற்றுள்ளதாகவும், மேலும் ஸ்ரேயா படப்பிடிப்பு குழுவினர்களில் ஒருவர் தான் என்றும் அவர் தெரியாமல் பாதுகாப்பு பகுதிக்கே வந்து விட்டதாகவும் கூறி விளக்கம் அளித்தனர். இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அதன் பின்னர் படக்குழுவினர்களையும் ஸ்ரேயாவையும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

இதனால் படக்குழு சில மணிநேரம் தாமதமாகி பதட்டத்துடன் காணப்பட்டுள்ளனர்.

loading...