கோலகலமாக அரங்கேறிய நடிகர் சதீஷின் திருமணம்... வரவேற்பு நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொண்டாங்கனு தெரியுமா?

Report
262Shares

எதிர்நீச்சல், மான் கராத்தே படங்களில் கொமடியனாக நடித்த நடிகர் சதீஷிற்கும், உதவி இயக்குனராகிய சாச்சியின் சகோதரி சிந்துவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்ததையடுத்து, ரசிகர்கள் காதல் திருமணமா? என்ற கேள்வியினை எழுப்பினர். ஆனால் இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் இவர்களது திருமண வரவேற்று நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இதில் சதீஷின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் மற்றும் முன்னணி நடிகர்களான விஜய்சேதுபதி, ஜீவா, உதயநிதி ஸ்டாலின் என பலரும் கலந்து கொண்டு சதீஷ் மற்றும் சிந்துவை வாழ்த்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி இவர்களின் திருமண வரவேற்பு புகைப்படங்களுடன், SathishWedsSindhu என்ற ஹாஷ்டேகினை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

loading...