90ஸ் கிட்ஸின் மறக்கமுடியாத தொகுப்பாளினி பெப்ஸி உமாவின் தற்போதைய நிலை என்ன?

Report
403Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை ஒரு சில நிகழ்ச்சிகளை விட நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அதிகளவில் பிரபலமடைவார்கள்.

இன்னும் சொல்லப்போனால், குறித்த தொகுப்பாளர்களுக்காகவே அந்த நிகழ்ச்சிக்கு அதிக ஆதரவு கிடைக்கும்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், நடிகர் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் போது, சிவகார்த்திகேயனுக்காக அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பெருமளவு ஆதரவு பெற்றது.

அந்த வகையில், 90ஸ் காலகட்டத்தில் அனைவருக்கும் பிடித்தமான தொகுப்பாளர் பெப்ஸி உமா.

இவர் தொகுத்து வழங்கிய பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்களும், அதை விரும்பாதவர்களும் இருக்கவே முடியாது.

அந்த அளவிற்கு, சினிமா நடிகை போல கண்ணை கவரும் புடவையுடன், அழகாகவும் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்தார்.

அவ்வளவு பிரபலாமக இருந்த பெப்ஸி உமா, அதன்பின்பு பெரிதாக எந்த நிகழ்ச்சிகளிலும் தலை காட்டவில்லை.

மேலும் அந்த சமயத்தில் இருந்த பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க அழைப்புகள் வந்ததாகவும் அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.

அதனை பிரபலமான பெப்சி உமா தற்போது ஒரு பிரபல நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிந்தவருகிறார்.