ராம் படத்தில் நடித்த நடிகை தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?.. கணவருடன் சேர்ந்து வெளியிட்ட புகைப்படம்..!

Report
110Shares

நடிகை கஜாலா தமிழ் சினிமாவில் அமீர் இயக்கத்தில் வெளிவந்த ராம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர்.

அதன் பின்பு பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார். அதன் பின்னர் தெலுங்கு நடிகர் அல்லாரி நரேஷ் என்பவருடன் காதல் சர்ச்சைகளில் சிக்கினார். அதனால் மனமுடைந்து போன அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து அளவிற்கு சென்றார்.

மேலும், இவர் கடைசியாக 2011ம் ஆண்டு மணி மணி மோர் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். சில ஹிந்தி சீரியல்களிலும் நடித்து வந்தார்.

அப்போது, அவருடன் சீரியலில் நடிக்கும், நடிகர் பைசல் அலிகான் என்பவரை காதலித்தார். இரண்டு வருடமாக இவர்கள் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மத்துடனும் இவர்களுடைய திருமணம் மும்பையில் நடைப்பெற்றது.

தற்போது இவர், சமூக நலம் பற்றி படிப்பதற்காக வெளிநாடு சென்று விட்டார். தற்போது படிப்பு முடிந்தவுடன் மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக திரும்பி உள்ளார் என்று பேசப்படுகிறது. அத்துடன் சமூக சேவையும் தொடர்ந்து செய்து வருகிறாராம்.

மேலும், சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் கஜாலாவின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. இதனால் மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காகவே இப்படி செய்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவரைக் கண்ட ரசிகர்கள் அடையாளமே தெரியவில்லை என்று கூறி வருகிறார்கள்.

loading...