இறப்பதற்கு முன் தோழிக்கு போன் செய்த சில்க் ஸ்மிதா.. மனவேதனையுடன் ரகசியத்தை உடைத்த அனுராதா..!

Report
464Shares

நடிகை சில்க் ஸ்மிதா என்றால் தமிழ் சினிமாவில் தெரியாதவர்களே யாரும் இருக்க முடியாது. இவர் தன்னுடைய 17 வயதில் சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரின் வாழ்க்கை வரலாற்றை டர்ட்டி பிக்ஸர் என்ற படமாக எடுத்தார்கள். அப்படி இருந்தும் எவ்வளவோ விஷயங்கள் சொல்லப்படாத விஷயங்கள் மர்மமாகவே உள்ளது.

1996ம் ஆண்டு செப்டம்பர் 23ம் திகதி சில்க் ஸ்மிதா அவர்கள் மர்மான முறையில் தற்கொலை செய்துகொண்டார். ஆனால், சில்க் ஸ்மிதா அவர்கள் காதல் தோல்வி, குடிப்பழக்கம், மன அழுத்தம் போன்ற காரணங்களால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

இவருடைய இழப்பு ஒட்டு மொத்த தமிழ் சினிமாவை உலுக்கியது என்று சொல்லலாம். மேலும், சில்க்கின் இழப்பு அதிகமாக அவருடைய தோழி அனுராதவை தான் பாதித்ததுள்ளது. நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு நாள் முன்னதாகவே தான் அனுராதாவிடம் தொலைபேசியில் பேசி உள்ளார்.

அப்போது, எனக்கு மனசு சரி இல்லை. ஒரு முறை உன்னை நேரில் சந்தித்து பேசவேண்டும் வரமுடியுமா என் வீட்டிற்கு என்று கேட்டு உள்ளார். ஆனால், அனுராதாவுக்கு அப்போது இருந்த சூழ்நிலை காரணமாக போகவில்லை முடியவில்லை.

இதைப்பற்றி அனுராதா தெரிவித்தது, என் தோழி சில்க் இறப்பதகு 4 நாட்களுக்கு முன் தன்னுடைய வீட்டிற்கு வந்து குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு நேரம் செலவிட்டார்.

அடுத்த சில நாளில் கன்னடம் படத்தில் ஒரு பாடலுக்கு நடிப்பதற்காக செல்கிறேன் என்று கூறினார். அதன் பின்னர் இறப்பதற்கு முன்னர், எனக்கு போன் செய்து உன்னிடம் பேச வேண்டும் வர முடியுமா? என்று கேட்டார்.

ஆனால், நான் என் குழந்தைதளை வீட்டில் தனியாக விட்டு செல்ல முடியாத நிலையில் இருந்ததாலும், என்னுடைய கணவர் வெளிநாட்டில் இருந்தாலும் செல்லமுடியவில்லை.

பின் நான் அவளிடம் மறுநாள் வந்து சந்திக்கிறேன் என்று கூறினேன். ஆனால், அடுத்த நாள் காலையில் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் எனக்கு வந்தது.

இந்த தகவலை கேட்டதும் எனக்கு நெஞ்சை பிளக்கும் அளவிற்கு இருந்தது. அன்று ஸ்மிதாவின் அழைப்பை ஏற்று நான் அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தால் சுமிதா இன்று உயிருடன் இருந்திருப்பார் என்று மனவேதனையுடன் அனுராதா தெரிவித்துள்ளார்.

loading...