25 ஆண்டுகளுக்கு பின்பு ரஜினியுடன் ஜோடி சேரும் மீனா... தீயாய் பரவும் காணொளி

Report
52Shares

சூப்பர் ரஜினிகாந்துடன் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜோடியாக நடித்த மீனா தற்போது மீண்டும் ரஜினியின் 168-வது படத்தில் நடிக்கவுள்ளது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இப்படத்தில் குஷ்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடாமலும் இருந்தது. தற்போது சன் பிக்சர்ஸ் காணொளி ஒன்றினை வெளியிட்டு ரஜினியுடன் மீனா நடிக்கவிருப்பதை உறுதி செய்துள்ளது.

ரஜியுடன் எஜமான், வீரா, முத்து என்ற வெற்றிப்படங்களில் கதாநாயகியாக மீனா நடித்துள்ளார். பின்பு கடந்த 2008ம் ஆண்டில் ரஜினி நடித்த குசேலன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஆனால் தற்போது தலைவரின் 168வது படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

loading...