லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலருடன் எங்கு சென்றுள்ளார் பாருங்க.. வைரலாகும் வீடியோ..!

Report
140Shares

கன்னியாகுமரியில் உள்ள பகவதியம்மன் கோவிலுக்கு தனது காதலர் விக்னேஷ்சிவனுடன் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சென்ற நிலையில் அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.

இவர் தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் குமரி பகவதியம்மன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் நடிப்பதற்காக, அவர் விரதம் இருந்து வருவதாகவும் இந்தப்படம் முழுக்க முழுக்க கன்னியாகுமரியில் பட பிடிப்பு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நள்ளிரவு திடீரென கன்னியாகுமரியிலுள்ள பிரசித்திப்பெற்ற பகவதியம்மன் திருக்கோவிலுக்கு நடிகை நயன்தாரா வந்தார். கோவிலுக்கு வந்த அவரை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்று சுவாமி தரிசனத்திற்கு அழைத்து சென்றனர். அரை மணி நேரம் சுவாமி தரிசனம் செய்த அவர் அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற பெண் போலீசாருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

மூக்குத்தி அம்மன் திரைப்படம் கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடக்கவுள்ள நிலையில் நயன்தாராவை கன்னியாகுமரியில் பார்த்த ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

loading...