ஈஸ்வர் மகாலட்சுமிக்குள் பழக்கம் ஏற்பட்டது இப்படித்தான்! வெளியான உண்மைகள்

Report
359Shares

சின்னத்திரை ஜோடிகளான ஈஸ்வர்- ஜெயஸ்ரீ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது, ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஈஸ்வர்- மகாலட்சுமிக்குள் பழக்கம் ஏற்பட்டது குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

தேவதையை கண்டேன் சீரியல் மூலம் ஈஸ்வர் மகாலட்சுமி அறிமுகமாகி கொண்டார்கள், இதற்கு முன்பே விவாகரத்து கேட்டு மகாலட்சுமி- அனிலின் வழக்கு நீதிமன்றத்தில் இருந்துள்ளது.

இந்நிலையில் அதே சீரியலில் நடிக்கும் மற்றொரு நடிகருடன் மகாலட்சுமி Live In Relationshipல் இருந்துள்ளார், இருவரும் சிலகாலம் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த நிலையில் சில காரணங்களால் பிரிந்தனர்.

இதனால் கடுப்பான அந்த நடிகர், ஆதாரங்களை எடுத்துக் கொண்டு மகாலட்சுமியின் கணவரிடம் சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரப்பட்ட மகாலட்சுமி பொலிசை வைத்து அந்த நடிகரை மிரட்ட இதற்காக ஈஸ்வரின் உதவியை நாடியிருக்கிறார்.

அப்போதிலிருந்தே இருவருக்கும் நெருக்கம் அதிகரித்தது, சீரியலில் எதிர்எதிர் துருவங்களாக இருந்தவர்கள் நண்பர்களாகினர்.

இதுபற்றி ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீக்கு தெரியவர பிரச்சனை வெடித்ததாம், தற்போது ஈஸ்வர்- ஜெயஸ்ரீ- மகாலட்சுமி- அனில் என ஒவ்வொருவரும் தங்களது தரப்பை பேட்டியளித்து வருகின்றனர்.

இதுஅனைத்தும் ஒருபுறம் இருந்தாலும் விவகாரத்து வழங்க அனிலுக்கு சம்மதம் இல்லாமல், மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளார்.

loading...