சம்பளம் கேட்டதற்கு அசிங்கப்படுத்தி விரட்டிவிடப்பட்ட ரஜினிகாந்த்... மேடையில் கலங்க வைத்த பேச்சு!

Report
358Shares

அன்று தனது சம்பள அட்வான்ஸைக் கேட்டதற்கு படப்பிடிப்பு தளத்திலிருந்து தன்னை விரட்டப்பட்ட பழைய நினைவுகளை மேடையில் கூறி அனைவரையும் கலங்க வைத்துள்ளார்.

ரஜினி நடித்த தர்பார் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது திரைத்துறைக்கு தான் வந்த அனுபவங்களை ரஜினிகாந்த் மேடையில் உருக்கமாக கூறியுள்ளார். ஆரம்பத்தில் ரஜினிகாந்த் பரட்டை கதாபாத்திரத்தில் 16 வயதினிலே படம் பயங்கர ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தை படத்தில் நடிப்பதற்கு கேட்டு வந்துள்ளனர்.

அப்போது 6000 ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 1000 ரூபாய் அட்வான்ஸ் கொடுப்பதாக உறுதி கொடுத்த நிலையில், முன்பணம் கொடுக்கப்படவில்லையாம்.

இதுகுறித்து தயாரிப்பாளரிடம் கேட்ட போது, நாளைக்கு வரும் பொழுது தருகிறேன் என்று கூறிவிட்டாராம். இதனை நம்பி மறுநாள் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று மேக்கப் போடுவதற்கு முன்பு ரஜினிகாந்த் அட்வான்ஸ் தொகையைக் கேட்டுள்ளார். அப்போதும் கொடுக்கவில்லை என்பதால் மேக்கப் போடுவதற்கு மறுத்துள்ளார்.

உடனே படப்பிடிப்பு தளத்திற்கு வந்த தயாரிப்பாளர், கடுமையாக திட்டியதோடு, நீயெல்லாம் ஒரு ஆளா என்றும் நான்கு படம் நடித்துவிட்டால் திமிரா என்று பேசியது மட்டுமின்றி கெட் லாஸ்ட், இந்த படத்தில் வாய்ப்பு இல்லை என்றும் விரட்டிவிட்டுவிட்டாராம்.

பின்பு கோடம்பாக்கம் ரோட்டில் நடந்த ரஜினிகாந்த், வரும் வழியில் 16 வயதினிலே போஸ்டரில், இது எப்படி இருக்கு என்ற வசனம் இடம்பெற்றிருந்ததை பார்த்து, தான் வெற்றி பெற வேண்டும் என்றும் வெளிநாட்டு கார் வாங்கி இதே வழியாக போக வேண்டும் என்று சபதம் மேற்கொண்டுள்ளார்.

அடுத்து இரண்டரை வருடம் கழித்து 4.25 லட்சத்துக்கு இத்தாலியன் பியாட் காரை வாங்கியதோடு, அதற்கு ஆங்கிலோ இந்தியரான ராபின்சன் என்பவரை ட்ரைவராகவும் வைத்துள்ளார். தன்னை அவமதித்த நிறுவனங்களுக்கு முன்பெல்லாம் காரில் சென்று வந்துள்ளார். இவை எல்லாவற்றிற்கும் தனது திறமை மட்டும்தான் காரணம் என்றால் தப்பாகி விடும் என்றும் இது எல்லாமே தனது படங்கள் வெற்றி பெற்றதால், நேரம், காலம், நல்ல மனிதர்கள் காரணம் என்று ரஜினிகாந்த் கூறிய போது அரங்கமே அமைதியாக கேட்கப்பட்டுள்ளது.