பூதாகரமாக வெடிக்கும் ஈஸ்வர் ஜெயஸ்ரீ விவகாரம்.. மஹாலஷ்மியின் கணவர் அளித்த பகீர் குற்றச்சாட்டு..!

Report
331Shares

சமீப நாட்களாக ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீ குடும்ப பிரச்சினை பெரும் பரபரப்பாக போய்கொண்டிருக்கிறது. தேவதையை கண்டேன் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி அதே சீரியலின் ஹீரோவான ஈஸ்வர் என்பவருடன் தகாத உறவில் இருப்பதாக ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து, ஈஸ்வர் ஜாமினில் வெளிவந்ததும், ஜெயஸ்ரீ கூறுவது அனைத்து பொய். அவர் பணத்திற்காக இப்படி நாடகம் ஆடுகிறார். ஜெயஸ்ரீக்கும், மஹாலஷ்மியின் கணவர் அனிலுக்கும் தான் தொடர்பு உள்ளது. அவர்கள் ஒன்றாக மது அருந்திய வீடியோ ஆதாரம் கூட என்னிடம் உள்ளது என பல சர்ச்சையான தகவல்களை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, மஹாலஷ்மி சமீபத்தில் அளித்த பேட்டியில், ஈஸ்வர் எனக்கு நல்ல நண்பர் மட்டும் தான், அவரை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை. நான் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறும் பிரச்சனையில் உள்ளேன், அது எனது சொந்த பிரச்சனை. ஆனால் ஈஸ்வருடன் என்னை தொடர்பு படுத்தி பேசும் ஜெயஸ்ரீ, எனது கணவருடன் நீண்ட நாட்களாக பழகி வருகிறார் என அவர் ஒரு பக்கம் பேசினார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட மஹாலஷ்மியின் கணவன் அணில் இதுவரை அவர் மட்டும் பேசாத நிலையில், தற்போது அவரும் பேட்டியளித்துள்ளார். அதில், “கடந்த சில நாட்களாக நிறைய பிரச்சனை ஓடிட்டு இருக்கு. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நாங்கள் இருவரும் சேர்ந்து இல்லை. நான் பணம் பணம் என அலைபவன் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த விஷயத்தில் நான் அவளை குத்தம் சொல்லவில்லை.

ஏனென்றால் அவளின் சூழ்நிலை அப்படி, எனக்கு இப்போவும் உன்னை பிடிக்கும் I still loving her. எனக்கு எதுக்காக விவாகரத்து கொடுத்தாங்கனு தெரியவில்லை. அவங்க இப்போ திரும்பி வந்தாலும் நான் முழு மனதோடு ஏற்றுக்கொள்வேன்.

மேலும் எனக்கும் ஜெயஸ்ரீஸ்க்கும் தொடர்பு இருப்பதாக கூறி பேசுகிறார்கள். நிச்சயம் அப்படி இல்லை. நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே, மஹாலக்ஷ்மி சொன்னதுபோல் அடிக்கடி சந்தித்து கொண்டதெல்லாம் கிடையாது. இரண்டு முறை சந்தித்துள்ளோம் அதுவும் 10 , 15 நண்பர்களுடன் சேர்ந்து தான் சந்தித்தோம் என அவர் கூறியுள்ளார்”.