தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் மேடையில் அழுத சின்னத்திரை நடிகை... மகள் கூறிய ஆறுதலால் நெகிழ்ச்சியில் அரங்கம்!

Report
226Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் மாம். இந்நிகழ்ச்சியில் தனது குழந்தையுடன் சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

முதல் சீசன் முடிந்த நிலையில், தற்போது இரண்டாவது சீசன் சென்று கொண்டிருக்கின்றது. இதில் தாய் மற்றும் குழந்தைகளுக்கிடையே சில போட்டிகள் நடைபெறுகின்றன.

குறித்த நிகழ்ச்சியில் தனது குழந்தையுடன் கலந்து கொண்டவர் தான் நீபா. இவர் சில திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார். இவரது குழந்தையின் பெயர் ஸ்ரீ. இவர்கள் இருவரும் சூப்பர் மாம் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தோல்வியை சந்தித்த சின்னத்திரை நடிகை கண்ணீர் வடித்து அழுகின்றார். ஆனால் அவரது குழந்தை எந்தவொரு அழுகையும் இல்லாமல் மிகவும் தெளிவான மனநிலையில் தனது தாயினை சமாதானம் செய்துள்ளது.

குறித்த காட்சியினை அவதானித்த பலரும் தாய்க்கு குழந்தை இப்படியொரு ஆறுதல் கூறியுள்ளதே என்று ஆச்சரியத்திலும், இவர்களை வாழ்த்தவும் செய்துள்ளனர்.

loading...