பிரியங்கா ரெட்டியை தொடர்ந்து 5 பேர் கொண்ட கும்பலால் வன்புணர்வு செய்து எரிக்கப்பட்ட இளம்பெண்..! தொடரும் கொடூரம்

Report
91Shares

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளம்பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இதேப்போன்ற கோரச்சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்திலும் அரங்கேறியுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் 23 வயதான இளம்பெண் ஒருவர் இரண்டு இளைஞர்களால் வன்புணர்வு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து, குறித்த வழக்கில் ஆஜராவதற்காக, இளம்பெண் நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த நிலையில், 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இளம்பெண்ணை மடக்கி அவரை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ததோடு, அவரி உயிருடன் தீ வைத்து எரித்துள்ளனர்.

இதில், படுகாயமடைந்த அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக, முந்தையை வழக்கில் கைதான 2 பேர் உள்பட 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

loading...