நீர் அருந்தும் பறவைகளை கற்சிலைகலாக மாற்றும் அதிசய ஏரி..! வைரலாகும் வீடியோ

Report
291Shares

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டின் வடபகுதியில் கென்யா நாட்டின் எல்லை அருகேயுள்ள நாட்ரான் என்னும் ஏரி தான் அந்த அதிசயமான ஏரியாகும்.

பார்ப்பதற்கு மிகவும் அமைதியாக இருக்கும் இந்த ஏரி கொடிய ஆபத்தை தன்னுள் மறைத்து வைத்துள்ளது. இந்த அபூர்வ விஷயத்திற்கு முக்கிய காரணம் அந்த ஏரியில் இயற்கையாக உள்ள ரசாயன கலவைதான்.

இங்கு தண்ணீர் குடிக்கும் பறவைகளும், பிற உயிர்களும் அந்த நீரில் உள்ள ரசாயனத்தினால் இறந்து கற்சிலைகளாகி விடுகின்றன.

புகழ்பெற்ற புகைப்பட கலைஞரான நிக்பிரேன் 2010ஆம் ஆண்டு தான்சானியா நாட்டின் வட பகுதியில் ஒரு உப்பு நீர் ஏரியை பார்த்துள்ளார்.

அப்போது தான் ஏரிக்கரைகளிலும் ஏரியின் நடுவிலும் ஏராளமான பிளமிங்கோ உள்ளிட்ட பறவைகள் கற்சிலைகளாக மாறி உப்புப்பொரிந்து நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இருப்பினும் மனம் தளராத நிக்பிராண்ட் மனதை கல்லாக்கிக் கொண்டு கற்சிலை பறவைகளை தனது விலையுயர்ந்த கேமராவில் பதிவு செய்துள்ளார்.

பறவைகள் கற்சிலைகளாக மாறுவது ஏன்?

  • அந்த உப்பு நீர் ஏரியில் கால்சியம் கார்பனேட், நைட்ரோ கார்பன் மட்டுமில்லாமல் பல வகையான வேதிப்பொருட்கள் கலந்துள்ளது.
  • மேலும், ஏரி நீரின் pரி அளவு 10.5 ஆகும். அதிக அளவு pரி கொண்ட நீரை குடிக்கும் அளவிற்கு மாற்றம் கொண்ட உயிரினங்களைத் தவிர மற்ற உயிரினங்கள் குடிப்பதால் அவை இறந்து விடுகின்றன. நாளடைவில் கால்சியம் கார்பனேட்டின் காரணமாக கற்சிலைகளாக மாறிவிடுகின்றன.
  • மேலும், இந்த உப்பு நீர் ஏரியின் தன்மை பற்றி தெரிந்த பறவைகள் இவ்வேரிக்கு வருவதில்லை. ஆனால் இதைப்பற்றி தெரியாத பறவைகள் இன்னமும் இந்த ஏரிக்கு வந்து தன் உயிரை விடுகின்றன.
  • அழகிருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும் என்பது இந்த ஏரியின் விஷயத்தில் நூறு சதவீதம் உண்மையாகிறது.