எனக்கும், மகாலட்சுமிக்கும் தொடர்பா..? என் மனைவிக்கும், அணிலுக்கும் தான் தொடர்பு..! பரபரப்பை ஏற்படுத்திய ஈஸ்வரின் பேச்சு

Report
453Shares

தேவதையைக் கண்டேன் சீரியல் நடிகர் ஈஸ்வருக்கும், அதே சீரியலில் வில்லியாக இருக்கும் மகாலட்சுமிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஈஸ்வரின் மனைவியும் சீரியல் நடிகையுமான ஜெயஸ்ரீ குற்றம் சாட்டியிருந்தார்.

இதனால், காவதுறை இஈஸ்வரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தற்போது பிணையில் இருந்து வெளியில் வந்த ஈஸ்வர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அதில், பொலிஸ் தன்னை ஆதாரம் இல்லாமல் கைது செய்ததாகவும், எனக்கும் மகாலட்சுமிக்கும் தொடர்பு இருப்பதாக தனது மனைவி ஜெயஸ்ரீ தவறான செய்தியை பரப்பி வருவதாகவும் ஈஸ்வர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறியதாவது, நான் போதைக்கு அடிமையாகி இருப்பதாகவும், குழந்தையிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அவர் கூறியது முற்றிலும் பொய்.

ஜெயஸ்ரீ தனது முதல் கணவரிடம் 2.5கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார்.

இப்படி தவறுக்கு மேல் தவறு செய்யும் அவருக்கு குழந்தையின் எதிர்காலம் குறித்து கவலை இல்லை.

அவர் கொடுத்த புகாரின் பேரில், பொலிசார் என்னிடம் எதுவும் கேட்காமல் என்னை மிரட்டி 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியுடன் தொடர்பு இருப்பதாக என்னுடைய மனைவி அவதூறு பரப்புகிறார். வேண்டுமானால் என்னுடைய மனைவிக்கும் மகாலட்சுமியின் கணவருக்கும் இடையே நட்பிருக்கலாம்.

நடிகை மகாலட்சுமியின் கணவர் அனில் என்பவரது தூண்டுதலின்பேரில் தான் இந்த பிரச்னை நடக்கிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய வீட்டை பறித்து, தன் பெற்றோரை விரட்டி விட்டு அங்கு ஜெயஸ்ரீ குடியிருப்பதாகவும், பணம் பறிக்கும் நோக்கத்தில் தான் இப்போது புகார் அளித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

வீடியோ பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்..

loading...