நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் லோஸ்லியா..! வைரலாகும் வீடியோ

Report
672Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்3யில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் இலங்கையைச் சேர்ந்த இளம்பெண் லோஸ்லியா.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தினத்திலிருந்தே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம், இணையத்தில் ஆர்மிகள் என ஒரே நாளில் பிரபலமடைந்துவிட்டார்.

இருப்பினும், பிக்பாஸ் வீட்டிற்குள் கவினுடன் காதல், யாரையும் மதிக்காமல் நடந்துகொண்ட விதம் என பல விமர்சனங்களைப் பெற்றார்.

ஆனால், இவரது ரசிகர்கள் இவரை கைவிடவில்லை, பிக்பாஸ் இறுதிச்சுற்றுவரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியில் வந்ததிலிருந்து, கவின் லொஸ்லியா காதல் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து இருவரிடமும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இருவரும், எதுவும் பேசாமல் அமைதி காத்துக் கொண்டே வருகின்றனர்.

இதனை ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். ஆண் நண்பருடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை கண்ட கவின் ஆர்மிகள், ஒரு சர்ச்சையை கிளப்பியது. லாஸ்லியா கவினை பற்று நினைத்து பாருங்கள், அவர் மனது காயப்படும் என பல கமெண்ட்ஸ்களை கூறி வருகின்றனர்.

மேலும், தனது நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் குதுகலிக்கும் வீடியோஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

24621 total views