சீரியல் நடிகையுடன் தொடர்பு.. குடிபோதையில் மகளின் மீது சிறுநீர் கழிப்பார்: கள்ளத்தொடர்பால் சீரழிந்த நடிகையின் வாழ்க்கை!

Report
261Shares

மகாலட்சுமிக்கும் தேவதையை கண்டேன் சீரியலின் ஹீரோவான ஈஸ்வருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக அவரின் மனைவியான சீரியல் நடிகை ஜெயஸ்ரீ புகார் அளித்த நிலையில் கணவன் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்போது பிரபல சீரியல்களில் வில்லியாக வலம் வரும் நடிகைகளில் முதன்மையானவர் மகாலட்சுமி. இவருக்கும் நடிகர் ஈஸ்வருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக அவர் மனைவி ஜெயஸ்ரீ புகார் அளித்தார்.

இந்நிலையில், அவர் அளித்துள்ள புகாரின் பேரில், ஈஸ்வர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈஸ்வரையும் அவரது தாயாரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ள நடிகை ஜெயஸ்ரீ, எங்களுக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தையும் உள்ளது. என் கணவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேவதையை கண்டேன் சீரியலில் மகாலட்சுமியுடன் நடித்திருந்தார்.

அதே சீரியலில், மகாலட்சுமியும் நடித்து வருகிறார். அவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் செல்போன்களில் மிகவும் கொஞ்சி கொஞ்சி பேசி வீடியோ காலில் இருப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

மேலும் மகாலட்சுமியின் மகனை தன்னை அப்பா என்று அழைக்குமாறு ஈஸ்வர் கூறியது, எங்கள் மகளை பெரிதும் பாதித்தது. அன்றிலிருந்து என் குழந்தை அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டாள்.

இதுமட்டுமல்லாது, என்னிடம் விவகாரத்து பெற்றுக்கொண்டு மகாலட்சுமியை திருமணம் செய்ய ஈஸ்வர் ஆசைப்பட்டார். என்னிடம் இதற்காக விவாகரத்து கேட்டார். நான் கொடுக்க மறுத்துவிட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர் தினமும் என்னை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். என் மாமியாரும் இதற்கு உடந்தை என்றார்.

அவர் லட்சக்கணக்கான பணத்தை சூதாட்டத்தில் இழந்து கடனாளியாக இருந்தனர். அப்போது நான் தான் அந்த பணத்தை திருப்பிக்கொடுத்தேன். தினமும் என்னிடம் வந்து மகாலட்சுமியுடன் வாழ விரும்புவதாக கூறி விவாகரத்து கேட்டு கொடுமைப்படுத்துகிறார். குடித்து விட்டு வீட்டுக்குள் சிறுநீர் கழிக்கிறார் என கூறியுள்ளார்.

குடித்துவிட்டு என்னை வயிற்றில் எட்டி உதைத்தார். அந்த வலி இன்னும் எனக்கு இருக்கிறது. மேலும், நடுவீட்டில் சிறுநீர் கழிப்பார்.

மேலும், நான் புகார் கொடுக்கவில்லை, அவர் அடித்ததில் நான் சுயநினைவு இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். மருத்துவமனை நிர்வாகம் தான் புகார் கொடுத்தது.

அதன்பின்பு, பொலிசார் என்னிடம் விசாரணையில் ஈடுபட்ட நிலையில், நான் உண்மையை கூறினேன். இதனால் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

மேலும், இது தெரிந்து மகாலட்சுமி தலைமறைவாகி விட்டாள்' என்றும் கூறியுள்ளார்.

loading...