வயதை அப்புறம் கேட்டுக்கலாம்..? வைரமுத்துவின் வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய சின்மயி..!

Report
686Shares

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல பின்னணி பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், பின்னணி பாடகி சின்மயியை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இருப்பினும், சின்மயி தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு நடக்கும் பாலியல் பிரச்சனைகளை சின்மயியும், இளம்பெண்களும் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி சின்மயி மற்றும் வைரமுத்து விஷயத்தில் பல கேள்விகள் எழுந்து வரும் நிலையில், சமீபத்தில் சின்மயி, வைரமுத்து மற்றும் ஏ. ஆர். ரகுமான் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் வைரமுத்துவை ஒருவர் ‘ஐ லவ் யூ’ என்று கூற, அதனை படித்து காண்பிக்கிறார் ஏ. ஆர். ரஹ்மான். உடனே, வைரமுத்து, அது ஆணா ? இல்லை பெண்ணா? பாருங்க அப்புறம் வயசை கேட்டுக்கலாம் என்று சொன்னதும் இருவரும் சிரித்து விடுகின்றனர்.

இது, வைரமுத்து கேளியாக பேசியதாக இருந்தாலும், வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் வைரமுத்துவை தற்போது திட்டி வருகின்றனர்.

loading...