ரஜினியை பார்க்க ஆசைப்பட்ட மாற்றுத்திறனாளி பிரணவ்... தீயாய் பரவும் புகைப்படம்

Report
80Shares

சமீபத்தில் கேரள முதல்வருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட மாற்றுத்திறனாளி பிரணவ் தற்போது ரஜினியை சந்தித்துள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.

தனது இரண்டு கைகளை இழந்த பிரணவ் இரண்டு கால்களை கைகளாக மாற்றி பல சாதனைகளை படைத்து வருகின்றார். சமீபத்தில் கேரள மாநில நிவாரணத்துக்கு நிதியளித்தபோது, தனது கால்கள் மூலம் முதலமைச்சருக்கு கைகுலுக்கி வணக்கம் வைத்தார். முதலமைச்சரும் அவரின் கால்களை பிடித்து குலுக்கினார். இப்புகைப்படம் தீயாய் பரவியது முதல்வருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில், பிரணவ் இன்று தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்தை பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த பிரணவ், இன்று போயஸ்கார்டன் இல்லத்தில் அவரை சந்தித்தார். பிரணவின் விருப்பத்தை தெரிந்த ரஜினி, தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

பிரணவ் தனது கால்களால் ரஜினிக்கு கைகொடுக்க, அத்துடன் கால்களால் வரைந்த ரஜினி ஓவியத்தையும் அவருக்கு பிறந்தநாள் பரிசாக அளித்ததுடன், தனது கால்கள் மூலம் ரஜினிக்கு கைகுலுக்கி வணக்கம் செய்தார். ரஜினியும் பிரணவ்வின் கால்களை கைகளாக பிடித்து குலுக்கிய புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.

loading...