நிச்சயதார்த்தத்தில் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நந்தினி சீரியல் நடிகை.... வெளியான புகைப்படம்

Report
94Shares

சுந்தர் சி இயக்கத்தில் பிரபல ரிவியில் ஒளிபரப்பான நாகினி என்ற பாம்பு சீரியல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் நித்யா ராம்.

வரும் 6ம் திகதி திருமணம் நடைபெற இருக்கும் தருணத்தில், தனது நிச்சயதார்த்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

கன்னட நடிகையான இவர் முட்டு மனசே என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, நாகினி சீரியலில் கவர்ச்சியாக வலம்வந்து இளைஞர்களையும் கட்டு போட்டிருந்தார். தற்போது லட்சுமி ஸ்டோர் நிகழ்ச்சியில் அவ்வப்போது பொலிசாக வந்து செல்கின்றார்.

நித்யா ராம் கடந்த 2014ம் ஆண்டு வினோத் என்பவரை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கவுதம் என்ற தொழிலதிபரைக் காதலித்து வந்த நித்யா, டிசம்பர் 6ம் திகதி திருமணம் செய்து கொள்ளவிருக்கின்றார். தற்போது அவரது நிச்சயதார்த்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

2913 total views