தீவிர மன அழுத்தத்தில் சகோதரி... ரிவி நிகழ்ச்சியில் கதறியழுத பிரபல நடிகை!

Report
172Shares

பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தனது சகோதரியை நினைத்து அழுத உருக்கமான காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

ஸ்டுடண்ட் ஆப் தி இயர், உத்த பஞ்சாப், ராசி உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்த ஆலியா பட், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராவார்.

பிரபல பாலிவுட் இயக்குனரான மகேஷ் பட், நடிகை சோனி ரஸ்தான் தம்பதியின் மகளான ஆலியாவிற்கு ஷஹீன் பட் என்ற மூத்த சகோதரியும் இருக்கின்றார். எழுத்தாளரான இவர் எழுதிய புத்தகத்தினைக் குறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆலியாவுடன் விவாதிக்கப்பட்டிருந்தது.

அப்போது தனது சகோதரி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டது குறித்து பேசிய ஆலியா, தன்னை அறியாமல் அழத் தொடங்கியுள்ளார். ஆலியாவின் அழுகையைக் கண்ட பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். குறித்த காட்சியினை அவதானித்த நெட்டிசன்கள் சகோதரி மீது ஆலியா வைத்திருக்கும் பாசத்தினை பாராட்டி வருகின்றனர்.

loading...