இணையத்தில் வைரலான திருமூர்த்திக்கு அடித்த அதிர்ஷடம் – முதல் முதலாக பாடிய பாடலின் வீடியோ..!

Report
117Shares

பாட்டு பாடி வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட திருமூர்த்தி தற்போது இசையமைப்பாளர் டி.இமானின் இசையில் பாடல் பாடுயுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது.

திருமூர்த்தி பிறவியிலேயே பார்வை இழந்தவர். இவர் நன்றாக பாடும் திறமையை பார்த்த இவரது, நண்பர் இவர் பாடிய கண்ணான கண்ணே பாடலை சமூகவலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

வீடியோவை பதிவேற்றம் செய்த சில நிமிடங்களிலேயே அது மிகப்பெரிய அளவிற்கு பேசப்பட்டது. அதிமாக வைரலான வீடியோவை இசையமைப்பாளர் டி.இமான் பார்த்த நிலையில், உடனடியாக திருமூர்த்திக்கு கால் செய்து பாராட்டினார்.

அதுமட்டுமல்லாது, திருமூர்த்தியின் குரலில் தான் ஒரு பாடல் பதிவு செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், மிகவும் பிரபலமான திருமூர்த்தியை தொலைக்காட்சிகளும் கொண்டாட ஆரம்பித்தன.

இதைத்தொடர்ந்து, இசையமைப்பாளர் இமான், இசையில் செவ்வந்தியே மதுவந்தியே என்ற பாடலை பாடியுள்ளார்.

ரத்னசிவா இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ள சீறு என்ற படத்தில் வரும் இந்த பாடலின் ப்ரோமோவை இமான் வெளியிட்டுள்ளார்.

கேட்க இனிமையாக இருக்கும் இந்த பாடலும், தற்போது இணையத்தில் டிரண்டாகி வருகிறது.

loading...