வேறு நடிகையுடன் தொடர்பு- பிரபல சீரியல் நடிகர் கைதானதன் பரபர பின்னணி! கண்ணீருடன் மனைவி

Report
147Shares

பிரபல நடிகை ஜெயஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் நடிகரான ஈஸ்வரும், அவரது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வம்சம் என்ற தொடரில் வில்லியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஜெயஸ்ரீ, அதே போன்று ஆபிஸ் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஈஸ்வர்.

ஆபிஸ் சீரியலுக்கும் பின் பல சீரியல்களில் நடித்து வந்த ஈஸ்வர், ஜெயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடி இப்போது திருவான்மியூரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை ஜெயஸ்ரீ அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில், தனது கணவர் ஈஸ்வர் அவரது தாயாருடன் சேர்ந்து கொண்டு கொடுமைப்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.

அதோடு, தனது நகைகள், 30 லட்சம் ரூபாய் வரையிலான பணத்தையும் ஈஸ்வர் அபகரித்துக் கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், குழந்தையுடன் தவித்து வருவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரில் பொலிசார் விசாரணை நடத்திய போது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் ஈஸ்வரும், அவரது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதற்கு பின்னணியில் ஈஸ்வர் தான் நடிக்கும் சீரியலில் வில்லியாக நடிக்கும் மகாலக்ஷமி என்ற நடிகையுடன் நெருங்கி பழகியதே காரணம் என தெரியவந்துள்ளது.

விஜேவாக அறிமுகமாகி தற்போது பல சீரியல்களில் நடித்து வரும் மகாலக்ஷிமிக்கு ஏற்கனவே திருமணமாக குழந்தையும் இருக்கிறது, அரசியல் பின்புலமும் இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

மகாலக்ஷமியுடன் வாழ ஆசைப்பட்டு தன்னிடம் விவாகரத்து கேட்டதாகவும், அதை கொடுக்க மறுத்ததால் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் கண்ணீருடன் வருந்துகிறார் ஜெயஸ்ரீ.

loading...