ஷாலினி பிறந்தநாளுக்கு அஜித் கொடுத்த இன்ப அதிர்ச்சி! வாயடைத்து போன ரசிகர்கள்.... குவியும் வாழ்த்துக்கள்

Report
612Shares

நடிகர் அஜித் அவர் மனைவி ஷாலியின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதனை பார்த்த ஷாலினியும் நெகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்துள்ளார்.

நடிகர் அஜித் ,ஷாலினியின் தாய் தந்தையரை சந்தித்து பள்ளிப்பருவத்தில் ஷாலினிக்கு நெருக்கமாக இருந்த நபர்கள் யார் யார் என்பதை அறிந்து கொண்டு அவர்களை மட்டும் ஷாலினியின் பிறந்தநாளுக்கு அழைப்பை விடுக்க சொல்லியிருக்கிறார்.

ஷாலினி எதிர்பாராத நேரத்தில் அவர் முன்னால் போய் நின்று சர்ப்ரைஸ் தர வேண்டும் என்பதுதான் திட்டமாம்.

அஜித், ஷாலினிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டதை ஒட்டி சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டி இருக்கும் லீலா பேலஸ் ஹோட்டலுக்கு அனைவரையும் டின்னருக்கு வரச் சொல்லியிருக்கிறார்.

ஏனெனில் லீலா பேலஸில் சிபியு அறையிலிருந்து கடலை ரசிப்பது ஷாலினிக்கு மிகவும் பிடிக்குமாம். மேலும், ஷாலினியிடம் நடிகர் அஜித் குடும்பத்துடன் ஒரு டின்னர் போயிட்டு வரலாம் என்று மட்டும்தான் கூறி இருந்தாராம்.

ஆனால்,ஷாலினியின் தோழிகள் முன்கூட்டியே ஹோட்டலுக்கு சென்று இருக்கிறார்கள். சொன்னபடியே சரியான நேரத்திற்கு அஜித்தும் வந்திருக்கிறார்.

மேலும் ,ஹோட்டலில் உள்ள ஒரு அறை முழுக்க ஷாலினியின் புகைப்படங்கள் மற்றும் திரையில் ஷாலினி என்று எழுதப்பட்ட வீடியோவும் ஓடிக்கொண்டிருந்ததாம். ஆனால், இது எதுவும் ஷாலினிக்கு முன்கூட்டியே தெரியாதாம். உடனே அதனை எல்லாம் பார்த்த ஷாலினி நெகிழ்ச்சியில் உறைந்து விட்டாராம். இந்த தகவலை ஷாலினியின் தோழிகள் ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ளனர்.

இதேவேளை, இந்த தகவல் வைரலாக ரசிகர்கள் அஜித், ஷாலினிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.