நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து இளம் பெண் ஒருவர் காணொளி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நித்தியானந்தாவுக்குச் சொந்தமான கல்வி நிறுவனத்தில் படித்த தனது மகளை மீட்டுத்தருமாறு இளம் பெண் ஒருவரின் பெற்றோர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பில் விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மா நித்தியானந்தா என்ற பெயரில் பேஸ்புக்கில் அந்த காணொளி வெளியாகி உள்ளது. அதில், "எனக்கு 18 வயசாகுது.. என்னை யாரும் கடத்தவில்லை. நான் பத்திரமாக இருக்கேன்.. என் விருப்பப்படியேதான் இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டும் இல்லை, நான் கடத்தப்பட்டதாகக் கூறி எனக்கு மனஅழுத்தத்தை தருகிறார்கள். எனக்கு பெற்றோரை பார்க்க விருப்பமில்லை என்றும் அந்த இளம் பெண் கூறியுள்ளார்.
மகள் வேண்டும் என்று போராடி கொண்டிருக்கும் பெற்றோருக்கு இந்த காணொளி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், பொலிஸார் இது குறித்த விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.