நாடோடிகள் பட நடிகை அபிநயாவா இது..! எப்படி இருக்காங்க பாருங்க.. வைரலாகும் புகைப்படம்

Report
80Shares

கடந்த 2009 ஆண்டு வெளியான நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபிநயா.

இவருக்கு, இயற்கையாகவே இரண்டு காதுகளும் கேட்காத மற்றும் சரியாக வாய்ப் பேச முடியாத திறன் உடையவர். இருப்பினும் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக்கொண்டவர்.

இவர், சினிமா வாழ்க்கையை தெலுங்கு சினிமாவில் தான் ஆரம்பித்தார். ஆனால் நாடோடிகள் படத்தை தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், ஈசன், 7 ஆம் அறிவு, வீரம், தனி ஒருவன் என தொடர்ந்து தமிழில் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அதேசமயம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என மிகவும் பிஸியாக இருந்தார் நடிகை அபிநயா. இறுதியாக விழித்திரு என்ற படத்தில் ரேடியோ ஜாக்கியாக நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, கடந்த 2 வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகை அபிநயா கடும் உடற்பயற்சிகளை செய்து தன்னுடைய உடல் எடையை குறைத்து உள்ளார் என்ற தகவல் வெளி வந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் எல்லா நடிகைகளை போல அபிநயாவும் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.

அதில் இவர் செம ஸ்லிம்மாகவும், மாடர்ன் உடையில் மிக அழகாகவும் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அபிநயாவா இது என செம ஷாக்கில் உள்ளனர்.

loading...