கணவர் ராஜசேகரின் விருதை மேடையில் வாங்கிய மனைவி... சாப்பாட்டிற்குக் கூட வழியில்லாத அவலம்

Report
276Shares

நடிகரும் இயக்குனருமான ராஜசேகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவினால் காலமானார்.

சமீபத்தில் பிரபல ரிவி இவருக்கு சிறந்த தந்தைக்கான விருதை அவரது மனைவியிடம் கொடுத்து கௌரவித்தது. மருத்துவமனையில் மருத்துவம் பார்ப்பதற்கு பணமில்லாமல் சிரமப்பட்டதும் இவரது மறைவிற்கு பின்பு தான் தெரியவந்தது.

சினிமாவிலும், சீரியல்களிலும் நடிப்பில் கொடிகட்டி பறந்த ராஜ சேகரின் மனைவி தற்போது சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் இருந்து வருகிறாராம்.

தான் இருக்கும் பொழுது எந்தவொரு குறையும் மனைவிக்கு வைக்காத ராஜசேகர், மனைவியின் பெயரில் பணம் என்று எதுவுமே சேமித்து வைக்கவில்லையாம். அவரது மனைவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதனை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தாரா கண்ணீருடன் கூறுகையில், கிட்டத்தட்ட 30 வருடமாக வெளிஉலகம் தெரியாத அளவிற்கு என்னை நன்றாக பார்த்துக்கொண்டார் மகராசன். பெரியளவில் பணத்தினை சேமித்து வைத்ததில்லை. அதற்காக அவரை ஒருபோதும் கடிந்து கொண்டதில்லை.

மிகவும் சிரமப்பட்டு லோன் வாங்கி கனவு வீட்டினைக் கட்டினார். அதன் லோன் பாதி இன்னும் அடைக்கமுடியாமல் இருப்பதால் வங்கியிலிருந்து தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அவரது கனவு இல்லமாக கட்டிய அந்த வீட்டை விற்கவும் மனமில்லாமததால், தற்போது சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

வேலைக்கு போக தற்போது ஆசை ஏற்பட்டுள்ளதால், அவர் நடித்த சீரியல் நிறுவனங்களில் வேலைக்கு கேட்டிருக்கிறேன். எனக்கும் எதாவது நடிப்பதற்கு ஒரு ரோல் கொடுத்தால் நடிப்பதாகவும் அல்லாமல் தான் வீட்டு வேலை செய்ய செல்வதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.