நெஞ்சம் மறப்பதில்லை நடிகை ஸ்ரீதுர்காவின் கணவர் இவரா...? வைரலாகும் புகைப்படம்

Report
417Shares

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலும் ஒன்று.

குறித்த தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பான இந்த சீரியல் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தது. இந்த சீரியலில் நடிகர் அமித் பார்கவ் கதாநாயகனாக நடிக்க, பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றும் சரண்யா நாயகியாக நடித்தார்.

இந்த சீரியலில், நடிகர் அமித்திற்கு அக்கா கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஸ்ரீதுர்கா.

இவர், சன் டிவியில் மதியம் ஒளிபரப்பான உறவுகள், தியாகம் தொடர்களில் நடித்து உள்ளார். மேலும், முந்தானை முடிச்சு தொடர்களிலும் நடித்து இருந்தார்.

இதை தொடர்ந்து இவர் ஊஞ்சல், அலைகள், சிகரம் சீரியல்களில் நடித்து உள்ளார்.

அதிலும் குறிப்பாக ஊஞ்சல் சீரியலில் தான் முதன் முதலாக நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இவர், சீரியல் மட்டுமல்லாது, வெள்ளித்திரையிலும், சில படங்களில் கேரக்டர் ரோலில் நடித்துள்ளார்.

சிறு வயதில் இருந்தே இவருக்கு போட்டோகிராபி எடுப்பதில் அதிக ஆர்வம் இருந்ததால், சினிமா துறையில் போட்டோகிராபர் ஆக வேண்டும் என்ற ஆசை அவருக்கு உள்ளது.

மேலும் ,வருங்காலத்தில் இசைப்பள்ளி ஒன்றை நடத்த வேண்டுமென்றும், அதில் படிக்க வசதியில்லாத குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று தனது லட்சிய கனவை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கௌதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

13717 total views