சரிதாவுடன் காதலில் விழுந்த மாதவன்!... என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

Report
791Shares

90 காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்றால் நடிகர் மாதவன் தான். இன்று வரை இவருக்கு பெண்களின் ரசிகைகள் மட்டுமே அதிகம்.

சமீபத்தில் நடிகர் மாதவன் மனைவி சரிதாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதில், “என் அன்பே, உன் வாழ்நாள் முழுவதும் உன்னை பிரகாசமாக சிரிக்க வைப்பேன் என நம்புகிறேன். நமது நன்மைக்காகவும் நீ, நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். ஏனா நீ இல்லாம எங்களுக்கு ரொம்ப கஷ்டம்.. நாங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சரிதா..!'' என்று குறிப்பிட்டுட்டார்.

சரிதா மாதவனின் காதல் கதை

நடிகர் மாதவனின் இயற்பெயர் மாதவன் பாலாஜி ரங்கநாதன். இவர் ஜூன் மாதம் 1ஆம் திகதி 1970 ஜாம்சத்பபூர் மாநிலம் பீகாரில் பிறந்தார். அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் இந்த படத்தில் நடிக்கும் போதே அவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

மாதவன் படங்களில் நடிகத்துவங்கும் முன்பே திருமணம் செய்துக்கொண்டாலும் அவர் பொது நிகழ்ச்சிகளில் அவரது மனைவியை பெரிதாக அடையாளபடுத்திக் கொண்டதில்லை.

மாதவனின் காதல் மனைவியான சரிதாவை 1999ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் 28 வருட காலத்தின் காதலின் அன்பு தற்போது வரை வெளிக்காட்டுகிறார்கள்.

மாதவனின் குடும்பம் மகாராஷ்டிராவில் குடியேறியது, இவர் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்தவர். மேலும், மாதவன் இராணுவத்தில் சேர வேண்டும் என்பதே கனவாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அவையெல்லாம் நடக்கமால் போனது.

அதன் பின்னர், சரிதாவின் மேல் காதல் வசப்பட்ட மேடி, அதைப்பற்றி கூறியதாவது, ”நான் சரிதாவை முதன் முதலில் சந்தித்தபோது, கோலாப்பூரில் படித்துகொண்டிருந்தேன். அவர் அப்போது விமானத்தில் வேலை தேடும் பணிக்காக என் வகுப்பில் படிக்க தொடங்கினார். அன்றிலிருந்து இருவருக்கும் ஒரு நட்பு ஏற்பட்டது.

அதன் பின்னர் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. எங்களின் காதல் வாழ்க்கையும் 8 ஆண்டுகளாக சீராக இருந்ததால், நாங்கள் திருமணம் செய்ய முடிவு எடுத்து திருமணம் செய்துகொண்டோம். என மாதவன் தெரிவித்தார்.

மேலும், மாதவன் அப்போது ஒரு சில இந்தி சீரியல்களில் மட்டுமே நடித்து வந்தார். அதற்கு பின் அவரின் முதல் தமிழ் திரைப்படமானது, திருமணத்திற்கு பிறகு தான் வெளிவந்தது. 2000ம் ஆண்டு அலைபாயுதே திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

2005ம் ஆண்டு இவர்களுக்கு அழகிய மகனான வேதாந்த் பிறந்தார். மாதவன் எப்போதும் மனைவி சரிதாவை திரைப்படங்களுக்கு நடிக்க செல்லும் இடங்களில் கூட்டிச் செல்வாராம். மேலும் சரிதா நான் திரைப்படங்களில் நடிக்கும் காதல் காட்சிகள் நிஜ வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவருக்கு தெரியும். எங்கள் இருவருக்கும் உள்ள உறவு நேர்மையானது என்றார்.

நான் அடிக்கடி வெளியே செல்லும் போது தொலைப்பேசியை விட்டுவிடுவேன், பிஸியாக இருந்தால் அவரிடம் ஒப்படைத்துவிடுவேன். எனக்கு அவரிடம் மறைக்க எதுவும் இல்லை. என்மேல் அவருக்கு எப்பொழுதும் நம்பிக்கை இருக்கிறது.

மேலும், சரிதா எனக்கு பல்வேறு திரைப்படங்களுக்கு தனது ஆடைகளை வடிவமைக்கவும் உதவ தொடங்கினார். நான் நடிக்கும் பணத்தையெல்லாம் மனைவி தான் முதலீடாக கவனித்து வருவார். எங்கள் விடுமுறை நாட்களிலும் அவர் தான் எங்கே வெளியே செல்லலாம் என்று தீர்மானிப்பார். என் மகனின் தேவைகளையும் அவரே பார்த்துகொள்வார் என காதல் மனைவி சரிதாவை பற்றி புகழ்ந்துள்ளார் ஒரு நிகழ்ச்சியில் பேசினார் மாதவன்.

loading...