இரண்டாவது திருமணம் செய்யப்போகும் நந்தினி சீரியல் நடிகை..! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Report
346Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெருமளவு மக்களின் ஆதரவைப் பெற்ற சீரியல் நந்தினி.

இந்த சீரியலில், கதாநாயகியாக நடித்ததன் மூலம் அதிகம் பிரபலமடைந்தவர் நடிகை நித்யா ராம்.

இவர் முதலில், தெலுங்கு, கன்னட தொலைக்காட்சி தொடர்களின் நடித்துக் கொண்டிருந்தார். பின்னர் நந்தினி சீரியல் மூலம் தமிழில் அறிமுகமாகி வேற லெவலில் புகழைப் பெற்றார்.

இந்நிலையில், தற்போது இவர், அடுத்த மாதம் இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், வினோத் கௌடா என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டார்.

பின்னர், நடிப்பில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த இவர், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபரை காதலித்து வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் டிசபர் 5 ஆம் திகதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், திருமண ஏற்பாடுகளை, நித்யா ராம் தங்கையும், கன்னட நடிகையுமான ரச்சிதா ராம் தான் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

loading...