உனக்கு பிடிக்கிறதோ.. இல்லையோ.. ஆனால் ஐ லவ் யூ..! அண்ணனுக்கு வாழ்த்து கூறி நெகிழ வைத்த வனிதா விஜயக்குமார்..!

Report
582Shares

நடிகர் விஜயக்குமார் மகனும், பிரபல நடிகருமான அருண் விஜய்க்கு இன்று பிறந்தநாள்.

இந்நிலையில், சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு தொடர்ந்து தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில், சர்ச்சைக்கு பெயர் போன நடிகை வனிதா விஜயக்குமார், தனது உடன்பிறந்த அண்ணன் அருண் விஜய்யின் பிறந்த தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், வனிதா விஜயக்குமாருக்கும், அவரது அப்பா, சகோதர, சகோதரிகளுக்குமிடையே பிரச்சனை இருப்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.

இந்நிலையில், வனிதா அருண் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் பதிவிட்டிருப்பது, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ட்விட்டில் அவர் தெரிவித்துள்ளதாவது,

கருத்து வேறுபாடுகளை தீர்த்துக் கொள்ளலாம். ஒரு வாழ்க்கை ஒரு குடும்பம் ஒரே ரத்தம். நீங்களும், நானும் வெவ்வேறு விதமாக பயணிக்கலாம் ஆனால் ஒன்றாகத் தான் துவங்கினோம். நம் குடும்பத்தை பெருமையடையச் செய்ய வேண்டும். #HBDArunVijay உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ ஐ லவ் யூ என்று தெரிவித்துள்ளார்.

19428 total views