குழந்தையுடன் விளையாடும் புன்னகை அரசி சினேகா... மேக்கப் இல்லாமலும் எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க..!

Report
951Shares

கடந்த 2000 ஆம் ஆண்டில் வெளியான என்னவளே என்ர படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சினேகா.

தொடர்ந்து, தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்ந்தார்.

இந்நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விகான் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது இரண்டாவது குழந்தை பிறக்கப்போகிறது என்றும், அதற்காக சமீபத்தில் தான் சினேகாவுக்கு வளைகாப்பு நடந்து முடிந்தது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அதுமட்டும் இல்லாமல் சினேகா குடும்பத்தினர் வளைகாப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையங்களில் பதிவிட்டு இருந்தார்கள். குறித்த புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் வாழ்த்து மழையை பொழிந்தனர்.

இந்நிலையில் நடிகை சினேகா அவர்கள் மேக்கப் இல்லாமல் தன் வீட்டில் தன் மகனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த புகைப்படம் தற்போது அதிகமாக ஷேர்களையும், லைக்குகளையும் பெற்று வருகிறது.

loading...