உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிக்பாஸ் சுஜா... கொள்ளை அழகில் ஜொலிக்கும் குழந்தையின் புகைப்படம் இதோ

Report
457Shares

பிக்பாஸில் முதல் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து புகழின் உச்சத்திற்கு சென்றவர் சுஜா வருணி.

இவரும் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ் என்கிற சிவக்குமாரும் காதலித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த தம்பதிகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு Adhvaaith என்று பெயர் சூட்டியுள்ளனர்.

கடந்த தீபாவளி அன்று குழந்தையுடன் புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார் சுஜா வருணி. ஆனால் இதில் குழந்தையின் முகத்தினை எமோஜி வைத்து மறைத்திருந்தார்.

தற்போது தனது குழந்தையின் முகத்தினைக் காட்டியதோடு, தனது முதல் திருமண நாளைக் கொண்டாடியுள்ளனர். இவர்களின் திருமண நாளிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

loading...