உயிரிழந்த பின் நிறைவேறிய நடிகரின் இறுதி ஆசை...! ஒட்டு மொத்த அரங்கமும் கண்ணீரில் மூழ்கிய காட்சி

Report
616Shares

அண்மையில் உயிரிழந்த தமிழ் திரைப்பட இயக்குநரும் பிரபல நடிகருமான ராஜசேகருக்கு சிறந்த தந்தைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

அதனை அவரின் மனைவி பெற்று கொண்ட காட்சி சமூகவளைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

'பாலைவனச் சோலை' படத்தை இயக்கிய இரட்டையர் இயக்குநர்களான ராபர்ட் - ராஜசேகரில் ஒருவர் இயக்குநர் ராஜசேகர். இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். சினிமா மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்து வந்தார்.

சரவணன் மீனாட்சி சீரியலில் இவரது கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. சத்தியா சீரியலிலும் இவரின் நடிப்பு பலரினால் பாராட்டப்பட்டது.

இதேவேளை, அவருக்கு நீண்ட நாட்கள் ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். அவர் வீடு கட்டி முடித்தவுடன் அவரின் சடலம் தான் அந்த வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.