காணாமல் போன மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.. நடிகை அசினின் கணவர் தொடங்கிய புதிய தொழில்..!

Report
358Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அசின். ஜெயம் ரவி நடிப்பில் எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பின்னர் அஜித், விஜய், விக்ரம், கமல் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான ஒரு இடத்தையும் பிடித்தார்.

மேலும், அதன் பின் பாலிவுட் வரை சென்று அங்கும் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரொம்பவே பிஸியான நடிகையானார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையவே 2016ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் மொபைல் கம்பெனி நிறுவனரான ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த அசின் ஆரின் என்ற பெண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் அசினின் கணவர் ராகுல் சர்மா நடத்தி வந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சமீப காலமாக பல சறுக்கள்களை சந்தித்து வந்தது.

இதனால், தற்போது ராகுல் ரிவோல்ட் எலக்ட்ரிக் என்ற பெயரில் பேட்டரி பைக் விற்பனையில் இறங்கியுள்ளார். தற்போது ராகுலின் சொத்து மதிப்பு மட்டும் 1400 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

12031 total views