20,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட புதிய வீட்டை வாங்கிய பிரபல நடிகை...! வீட்டின் விலை மட்டும் இத்தனை கோடியா?

Report
364Shares

முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ராவை அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படம் மூலம் தமிழ்சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பிறகு, தமிழ்சினிமாவை விட்டு, பாலிவுட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்த பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்துகொண்டார். இதனால், பெரும்பாலும் அமெரிக்காவிலேயே இருக்கும் பிரியங்கா சோப்ரா, தனது முதலாம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம் சில வாரங்களில் வர உள்ள நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் சான்பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை பிரியங்கா சோப்ரா வாங்கி உள்ளார்.

மேலும், இந்த வீடு 20,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டது ஆகும்.

இந்த ஆடம்பர வீட்டில் 7 படுக்கையறைகள், 11 குளியலறைகள், 18 கழிவறைகள் உள்ளன என்ற தகவல் வந்து உள்ளது. அதோடு இதைக் கேட்டவுடன் தலையே சுற்றிவிட்டது. அந்த அளவிற்கு வீட்டின் விலையும் வீட்டின் பிரமாண்டமும் உள்ளது. அது மட்டுமில்லாமல் வீட்டிற்குள்ளேயே நீச்சல் குளம், பொழுதுபோக்கிற்கான பவுலிங் அரங்கம், சினிமா தியேட்டர், பார் மற்றும் ரெஸ்டாரன்ட், கூடைப்பந்து விளையாடுவதற்கான உள்ளரங்கம், உடற்பயிற்சி மையம் என சகல வசதிகளும் அமைக்கப்பட்ட வீடாக இருந்தது.

இவ்வளவு ஆடம்பரமான இந்த வீட்டை 20 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 144 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார் பிரியங்கா சோப்ரா.

12897 total views