கணவருடன் சேர்ந்து நஸ்ரியா வெளியிட்ட லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படம்.. லைக்குகளை அள்ளி வீசும் ரசிகர்கள்..!

Report
238Shares

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை சுண்டி இழுத்தவர் தான் நடிகை நஸ்ரியா. இவர் ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். ஆனால், இவர் தனது 12 வயது முதல் பல்வேறு மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

மேலும், மலையாளத்தில் பிரபல தொலைக்காட்சியான ஏசியாநெட் என்ற தொலைக்காட்சியில் மஞ்சு ஸ்டார் சிங்கர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். ஆரம்பத்தில் மலையாளத்தில் கதாநாயகியாக நடித்து வந்த நஸ்ரியா, பின்னர் தமிழில் நிவின் பாலி நடிப்பில் வெளியான நேரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தன் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த நஸ்ரியா, ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இவருக்கு ஒரு நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. அதன் பின்னர், நஸ்ரியா கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார் திருமணத்திற்குப் பின்னர் நடிகை நஸ்ரியாவிற்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்து சில ஆண்டுகள் கழித்து சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில், தற்போது இணையத்தளங்களில் அடிக்கடி புகைப்படத்தை பதிவிட்டு வரும் நஸ்ரியா. தன் கணவருடன் சேர்ந்து லேட்டஸ்ட் புகைப்பட செல்ஃபியை எடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

View this post on Instagram

@iam_nazriya #nazriya

A post shared by Nazriya Nazim (@iam_nazriya) on

8206 total views