செல்போனை பயன்படுத்தி ஆன்லைன் ஆர்டர் செய்த குரங்கு.. இணையத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய காட்சி..!

Report
176Shares

குரங்கு ஒன்று உரிமையாளரின் செல்போனை பயன்படுத்தி ஆன்லைனில் மளிகை பொருட்களை ஆர்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் ஒரு புத்திசாலி குரங்கு ஒன்று செல்போனை பயன்படுத்தி ஆன்லைனில் மளிகை பொருட்களை ஆர்டர் செய்து அவரின் உரிமையாளரை ஆச்சர்யபட வைத்துள்ளது. அந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

சீனாவின் சாங்ஜோவில் உள்ள யான்செங் காட்டு விலங்கு உலகில் பணிபுரியும் எல்வி மெங்மெங் என்ற பெண், தனது கணக்கு வழியாக ஒரு ஆர்டர் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு யார் ஆர்டர் செய்திருப்பார்கள் என்று சி.சி.டி.வி காட்சிகளை பரிசோதித்தபோது ஆர்டர் செய்தது வேறு யாருமல்ல அவருடைய செல்லப் பிராணி குரங்குதான் என்பது தெரியவந்தது.

தனது குரங்கு பசியுடன் இருப்பதை உணர்ந்த மெங்மெங் தனது தொலைபேசியில் தினசரி தேவைகளை ஆர்டர் செய்ய இருந்தார். இடையில் வேலை காரணமாக அதை நிறுத்திவிட்டு உணவு தயாரிக்க சமையலறைக்குள் சென்றார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தபொழுது, ஆர்டர் ஆனாதை பார்த்து, குழப்பமடைந்து அதை செய்தது குரங்கு தான் என கண்டுப்பிடித்தார். இது பற்றி மெங்மெங் கூறுகையில், ஆன்லைனில் மளிகை சாமான்களை அடிக்கடி ஆர்டர் செய்ததாகவும், அவளுடைய குரங்கு அதைக் கற்றுக் கொண்டு அதைப் பிரதிபலித்திருக்கலாம் என்றும் கூறினார்.

அதோடு, அந்த குரங்கு தேவையான பொருட்களையே ஆர்டர் செய்திருந்ததால் ஷாப்பிங்கை ரத்து செய்யவில்லை என்று மெங்மெங் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்த வீடியோ காட்சி இணைய ஊடகங்களில் வைரலாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

7158 total views