பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பங்குபெற்று ரசிகர்களை கவர்ந்தவர்கள் தான் லாஸ்லியா, தர்ஷன், முகேன் ராவ், சாண்டி, கவின் போன்றவர்கள். ஆனால் பிக்பாஸ் சீசன் டைட்டிலை முகேன் ராவ் வென்றார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் போட்டியாளர்கள் அனைவருமே ரொம்ப பிஸியாகவே இருக்கிறார்கள். வெளியே செல்லும்போது எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தையுமே இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். தற்போது போட்டியாளரான பாத்திமா பாபுவுடன், லாஸ்லியா, தர்ஷன், முகேன் ராவ், ரேஷ்மா என இவர்கள் அனைவரும் செல்ஃபி எடுத்து பதிவிட்டுள்ளனர்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறார்கள்.