டிக்டொக் செயலியில் பரவிய வீடியோ... பள்ளி மாணவனால் இரண்டு இளம்பெண்களுக்கு ஏற்பட்ட விபரீதம்..!

Report
117Shares

உத்திரபிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர் ஒருவர் இளம்பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து டிக்டொக் செயலியில் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் அசாம்கர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர், அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து டிக்டொக் செயலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதைக்கண்ட, குறித்த இளம்பெண்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக, அப்பகுதியில் காவல் நிலையத்தில் இந்த பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் பங்கஜ் சாஹ்னி தான் இம் மாதிரியான மோசமான செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மாணவன் பங்கஜை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் .

அந்த விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது அப்போது அந்த மாணவன் ஒரு திருமணத்தின் போது இந்தப் பெண்களைப் பார்த்ததாக கூறியுள்ளான்.

மேலும், இவர்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதற்காக புதியதாக போலியான அக்கவுண்ட்களை டிக் டாக் மற்றும் ஃபேஸ்புக்கில் அந்த சிறுவன் உருவாக்கியதாகவும் விசாரணையில் கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தைப் பற்றி காவல்துறை அதிகாரி திரிவேணி சிங் பேசுகையில், இந்த வழக்கில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட டிக்டாக்கிற்கு நாங்கள் ஒரு அறிவிப்பை அளிக்க உள்ளோம். மேலும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்

loading...