பதுங்கி இருந்து பாய்ந்த சிறுத்தை.. ஒரு நொடியில் தப்பித்த இளைஞர்கள்.. அதிர்ச்சி காட்சி..!

Report
221Shares

சிறுத்தை ஒன்று இரு சக்கர வாகனத்தில் செல்லும் இரு இளைஞர்களை பதுங்கி இருந்து தாக்க முற்படும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வனப்பகுதி சாலை ஒன்றில் சிறுத்தை ஒன்று பதுங்கி படுத்திருக்கிறது. இதைக் கவனித்த வாகன ஓட்டிகள் சிறுத்தை சாலையைக் கடக்கட்டும் என பொறுமையாக காத்திருந்துள்ளனர். ஆனால் இவர்களை கடந்து ஒரு இருசக்கர வாகனம் சென்றுள்ளது.

இதைக்கவனித்த அந்த சிறுத்தை இளைஞர்களை குறிவைத்து தாக்க முற்படுகின்றது. ஆனால் நூலிழையில் அந்த இளைஞர்கள் இருவரும் தப்பியுள்ளனர்.

இந்த காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்ட நபர், “சிறுத்தை எவ்வாறு தவறவிட்டது. அந்த வனத்தின் உண்மையான உரிமையாளரான சிறுத்தைக்கு சரியான வழியைக் கொடுக்க அனைவரும் காத்திருந்தனர். ஒரு இரு சக்கர வாகன ஓட்டுநர், தன் வழியில் பயணிக்க விரும்பினார். அதுவே, அவரது கடைசி சவாரியாக இருந்திருக்கும். காடுகளை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகவும் பரவியுள்ளது.