சினிமாவை வெறுத்த 'கருத்தம்மா' நடிகர் தற்போது என்ன செய்கிறார்? 18 ஆண்டிற்கு பின்பு அடித்த அதிர்ஷ்டம்

Report
540Shares

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவிற்கு கொடுத்த பிரபலங்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

அவ்வாறு பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் நடிகர் ராஜா. இவருக்கு ஆரம்பமே அமர்க்களமாகத் தான் இருந்து வந்தது. கருத்தம்மா படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்பு கிடைத்து வெற்றியினையே சந்தித்து வந்தார்.

இவரது சிரிப்பு, அழகு அன்றைய கல்லூரி மாணவ, மாணவர்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 50க்கும் மேற்பட்ட படத்தில் நடித்த இவருக்கு இளம்நடிகர்கள் போட்டியாக வரவே இவர் துணை நடிகராக நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதனால் சினிமாவை வெறுக்க ஆரம்பித்த ராஜா, அதில் சம்பாதித்த பணத்தை வைத்து மார்பிள் வியாபாரத்தினை ஆரம்பித்தார். தற்போது அந்த தொழிலிலும் மிகவும் கொடிகட்டி பறந்து வந்த நடிகர் ராஜா தற்போது சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.

ரீ எண்ட்ரி குறித்து நடிகர் ராஜா கூறுகையில், ஆரம்பத்தில் அடுத்தடுத்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததோடு புகழின் உச்சத்திற்கும் சென்றேன். பின்பு நடிக்கும் வாய்ப்பு குறைந்ததால் மார்பிள் தொழிலில் இறங்கினேன். அதில் மிகவும் நன்றாக சம்பாதித்து வருகின்றேன்.

ஒருநாள் போனில் விக்ரம் எண்ணைத் தொடர்பு கொண்டார். எனது மிக நெருங்கிய நண்பர்களில் விக்ரமும் ஒருவரே... தனது குடும்பம், தொழில் என அனைத்து விசாரித்த விக்ரம் தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்னிடம் கேட்டார். அதற்கு சரியென்று கூறிய என்னிடம் தன் மகன் ஆதித்ய வர்மா நடிக்கும் படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்க வேண்டும் என்று கேட்டதும், அவரின் பேச்சை மறுக்க முடியாமல் நடித்துக்கொடுத்தேன். மீண்டும் தான் நடிக்க வந்ததில் தனக்கு எந்தவொரு வித்தியாசமும் தெரியவில்லை என்றும் தான் நடித்துக்கொடுத்த படம் வரும் 21ம் திகதி வெளியாகவிருப்பதாகவும் கூறியுள்ளார்.