செம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம்... மாப்பிள்ளை இவர் தானா...? வைரலாகும் புகைப்படங்கள்

Report
246Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், அதிகமான மக்களால் விரும்பி பார்க்கப்படும் சீரியல் செம்பருத்தி.

தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது இந்த செம்பருத்தி சீரியல்.

மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கின்ற தொடராக செம்பருத்தி உள்ளது. அதுவும் செம்பருத்தி சீரியல் என்றால் சாப்பிட கூட மாட்டார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தது.

மேலும்,செம்பருத்தி சீரியலில் நடிகை ஷபானாவுக்கு ஜோடியாக நடிப்பவர் ஆபிஸ் சீரியலில் புகழ்பெற்ற கார்த்திக் ராஜ் தான். அதுமட்டும் இல்லாமல் சின்னத்திரையில் கார்த்திக்கை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு சீரியலில் மிகப் பிரபலமான ஹீரோ.

மேலும்,செம்பருத்தி சீரியலில் இவர்கள் இருவருடைய கெமிஸ்ட்ரியும் வேற லெவல். அந்த அளவிற்கு இவர்களுடைய ரொமான்ஸ் உள்ளது.

இதே சீரியலில், வில்லி கேரக்டரான மித்ரா என்ற கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் பாரதா நாயுடு. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், மாடலிங்கில் தனது கெரியரை தொடங்கி தேன்மிட்டாய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து, சில படங்களில் நடித்துள்ள இவர், பெரிய அளவு பிரபலமாகவில்லை. இதனால் சீரியல் பக்கம் தலைகாட்டினார்.

இந்நிலையில், பாராதா மற்றொரு இளைஞருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது, இவர்களின் கல்யாண போட்டோசூட்டாக இருக்குமோ என்று பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

loading...