'பள்ளிக்கூடத்தை கண்டுபிடித்தவர் கையில் கிடைத்தால்....' தனது பாஷையில் வெளுத்து வாங்கும் சிறுமி!

Report
332Shares

அந்த காலத்தில் பள்ளிக் செல்ல மாட்டேன் என்று பெற்றோர்களிடம் வெளிப்படையாக கூறினால் அடித்து துவைத்து விடுவார்கள்.

ஆனால் தற்போதைய குழந்தைகள் எதுவாக இருந்தாலும் பெற்றோர்களிடம் அதிரடியாக கூறிவிட்டு அவர்களின் வாயை அடைத்து விடுகின்றனர்.

இங்கு சிறுமி ஒருவர் தனக்கு தெரிந்த ஹிந்தி பாஷையில் பிளந்து கட்டிய காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.

குறித்த காட்சியில் சிறுமி ஒருவர், எனக்கு ஸ்கூலில் இருந்து விடுதலை வேண்டும். அதுவும் ஒரு மாதம் விடுதலை வேண்டும். காலை எழும்பி, பிரஷ் பண்ண வேண்டும், தண்ணீர் குடிக்க வேண்டும், வேகமாகப் பள்ளிக்குப் பால் குடித்துவிட்டு ஓட வேண்டும். அங்கே போய் அமர்ந்தால் பிரேயர், இங்கிலீஸ், கணக்கு, இங்கிலீஸ், இவிஎஸ் வேற குஜராத்தியும் இடையில் வருகிறது என்று தனது பாணியில் மிகவும் அழகாக புலம்பியுள்ளார்.

பின்பு இதனை காணொளியாக எடுத்தவர், இந்த பள்ளியைக் கண்டுபிடித்தவர் கிடைத்தால் என்ன செய்வீர்கள் மேடம் என்றும் கடவுள் நன்றாக தானே படைத்திருக்கிறார் என்றும் மோடிக்கு என்ன சொல்ல விரும்புகீறீர்கள் என்று அடுக்கடுக்காக கேள்விகளை சிறுமியிடம் வைத்துள்ளார்.

அதற்கு சிறுமி, இந்த பள்ளியை கண்டுபிடித்த ஆளை பிடித்து துவைத்து, தண்ணீர் தெளித்து அயன் பண்ணிடுவாங்களாம். அதுமட்டுமில்லங்க கடவுள் எல்லாத்தையும் நல்லாதான் படைத்திருக்கிறாராம்... ஆனால் படிக்கிறதையும் நன்றாக படைத்திருந்தால் மஜாவாக இருக்கும் என்றும் மோடி கண்டிப்பாக ஒரு தடவை தோற்கடிக்கத்தான் வேண்டும் என்றும் காரசாரமாக பதிலளித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவிவரும் இந்த காட்சியினை பலரும் பகிர்ந்தும், தங்களது கருத்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.

loading...