ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறிப்போன தமிழ் நடிகை! கைவிட்ட கணவர்... அனாதையாக வாழும் அவலம்!

Report
1248Shares

நடிகை கனகா தற்போது அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போய் மிக பரிதாபமாக உள்ளார்.

ஒரு காலத்தில் சினிமா துறையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த நடிகைகளில் கனகாவும் ஒருவர்.

அவர் தற்போது எந்த ஒரு கவனிப்பும் இன்றி மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.

இப்படி கவனிக்க யாரும் இல்லை என்ற காரணத்தினால் இவர் ஆலப்புழாவில் உள்ள அனாதைகள் பராமரிப்பு இல்லம் ஒன்றில் புற்றுநோய் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேவேளை, கனகா, தனது வீட்டில் தனிமையில் தான் இருப்பதாகவும், சொத்துக்களை யாராவது பறித்து விடுவார்களோ என்ற பயத்தினால் தான் அவர் யாருடனும் பேசிப்பழகுவது இல்லை என்று அக்கம் பக்கத்தினர் கூறி வருகின்றனர்.

நடிகை கனகா 1973 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் நடிகை தேவிகாவின் மகளும் ஆவார். இவருடைய தாய் தேவிகா ஒரு திரைப்பட நடிகை ஆவார்.

இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்களுடன் நடித்தவர். இவருடைய தாய் ஒரு சினிமா நடிகை என்பதால் இவருக்கு சினிமா துறையில் நுழைய ஈசியாக இருந்தது.

கனகா கங்கை அமரன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளிவந்த கரகாட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படம் 425 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.

அதோடு கரகாட்டம் படம் என்று சொன்னாலே இன்னும் கூட அனைவரும் மனதில் ஞாபகத்தில் வருவது கனகா தான். இதன் பின்னர் பல வெற்றிப்படங்களில் இவர் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்றவர். தற்போதைய நிலையை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.