மூக்குத்தி முருகனின் வாழ்க்கையையே மாற்றிய தளபதி விஜய்... வெற்றியின் ரகசியத்தினை உடைத்த முருகன்

Report
661Shares

பிரபல ரிவியின் சூப்பர் சிங்கர் இறுதிசு் போட்டி நிகழ்சசி கோயம்புத்தூரில் நடைபெற்றது. இந்த இறுதி நிகழ்ச்சியைக் காண பல்லாயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டிருந்ததோடு நேரலையாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இறுதிப் போட்டியில் சாம் விஷால், கெளதம், புன்யா, மூக்குத்தி முருகன், புன்யா ஆகியோர் கலந்து கொண்டதில், மூக்குத்தி முருகன் சூப்பர் சிங்கரின் டைட்டிலை வென்று 50 லட்சம் மதிப்புள்ள வீட்டினை பரிசாக பெற்றார்.

இந்நிலையில் மூக்குத்தி முருகனின் பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. தற்போது மூக்குத்தி முருகன் இந்த அளவிற்கு பாடுவதில் ஆர்வம் எடுத்துக்கொண்டு வெற்றி பெற்றதற்கு யார் காரணம் என்பதை தற்போது கூறியுள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில், தான் பாடுவதற்கு இந்த அளவிற்கு ஆர்வம் வந்ததற்கு காரணம் தளபதி விஜய் தான் என்று கூறி பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தார். ஆம் இவர் ஆரம்பத்தில் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் வந்த இன்னிசை பாடி வரும் என்ற பாடலைத் தான் பெண் குரலில் பாடியுள்ளாராம்.

இந்த பாடலை பாடியதற்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, பலரும் இவரைப் பாராட்டவே தான் அதிகமான பாடல் பாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகவும், அந்த ஊக்கம் தான் என்னை இந்த அளவிற்கு பாட வைத்ததாகவும், விஜய்யினால் எனது வாழ்க்கையே மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.