புகழின் உச்சத்தில் இருந்த அஜித் பட நடிகையா இது? விவாகரத்தின் பின்னர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?

Report
417Shares

நடிகை ஹீரா ராஜகோபால் 2002 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை நிறுத்தி விட்டார். இந்நிலையில் அவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் உலாவி வருகின்றது.

கடந்த 1991 ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளிவந்த ‘இதயம்’ படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் சினிமா துறையில் முன்னணி நடிகர்களான கமல், மம்முட்டி, சிரஞ்சீவி, அஜித்குமார், நாகர்ஜுனா, பாலகிருஷ்ணாவின், கார்த்திக், ரவி தேஜா மற்றும் அனில் கபூர் போன்ற பல சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

இவர் தன்னுடைய நடிப்புத் திறனால் பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

மேலும், தல அஜித்துக்கு ஜோடியாக ‘காதல் கோட்டை மற்றும் தொடரும்’ ஆகிய படங்களில் நடித்து உள்ளார். இந்த இரு படங்களும் இவருக்கு பெரிய ஹிட் கொடுத்தது என்று கூட சொல்லலாம்.

அதன் பின்னர் சினிமா துறையில் வாய்ப்பு குறைய தொடங்கியுள்ளது. 2002 ஆம் ஆண்டு புஷ்கர் மாதவ் நாட்டுவைர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக 2006 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார்கள்.

தற்போது நடிகை ஹீரா ராஜகோபால் என்.ஜி.ஓ ஒன்று ஆரம்பித்து அதில் பலருக்கும் வேலை வாய்ப்புக் கொடுத்து வருகிறார். அவரினால் பல குடும்பங்கள் மகிழ்ச்சியாக உள்ளது.

அதுமட்டும் இல்லாமல் பல புத்தகங்களையும் எழுதி வருகிறாராம். எனினும், அவரின் திறமைகளை பலர் பாராட்டி வருகின்றனர்.விவாகரத்தின் பின் தனித்து வாழும் அவர் சமூகத்தில் சிறந்த எழுத்தாளராகவும் பலருக்கு எடுத்து காட்டாகவும் இருக்கின்றார்.

இருப்பினும், அவரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது நடிகை ஹீரா ராஜகோபாலா என்று அதிர்ச்சியில் உள்ளனர்.