மிஸ்டுகால் மூலம் துளிர்விட்ட ரொமாண்டிக் காதல்... நேரில் சந்தித்த போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்..!

Report
159Shares

கேரளாவில் செல்போன் மிஸ்டுகால் மூலம் அறிமுகமான காதலனை, காதலி நேரில் சந்திக்கச் சென்று அதிர்ந்துபோய் நின்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதா. இவருக்கு திருமணம் ஆன நிலையில், வீட்டில் இருக்கிறார்.

இந்நிலையில், எப்பொழுதும் போனும் கையுமாக இருக்கும் சுதாவிற்கு மிஸ்டுகால் மூலம் ஆண் நண்பர் ஒருவர் பழக்கமாகியுள்ளார்.

நீண்டநாட்கள் தொடர்ந்த, இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற, இருவரும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே காதலித்து வந்தனர்.

இந்நிலையில், ஒரு கட்டத்தில் இருவரும் நேரில் பார்க்க முடிவு செய்துள்ளனர். உடனே காதலன் தன் வீட்டில் இன்று ஆள் இருக்கமாட்டார்கள் என்றும், தனது வீட்டிற்கு வருமாறும் சுதாவை அழைக்க, சுதாவும் கணவரிடம் பொய் சொல்லிவிட்டு காதலனைப் பார்க்க சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து, காதலன் அனுப்பிய முகவரிக்கு சென்று கதவை தட்ட, வீட்டின் உள்ளே இருந்து பிளஸ் ஒன் மாணவன் கதவை திறந்து, ‘யாருங்க வேணும்?’ என்று அவன் கேட்க, காதலன் பெயரைச் சொன்னார் சுதா.

அது நான் தான். நீங்க...? என்று மாணவன் கேட்க, சுதா தனது பெயரைச் சொன்னதும் அதிர்ச்சி அடைந்தான். அவன், சுதாவை மாணவி என்ற நினைப்பிலேயே காதலித்து வந்துள்ளான்.

ஆனால், சுதா பெரிய பெண் என்பது அப்போது தான் தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியில் செய்வதறியாது கூச்சல்போட அக்கம் பக்கத்தினர் திரண்டனர். பிறகு அவர்களிடம் நடந் ததை சொன்னார் அந்தப் பெண். அவர் கணவரை வரவழைத்த ஊர்க்காரர்கள், அட்வைஸ் செய்து அவருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த மாணவன், தனது அப்பாவின் போன் மூலம் இந்தப் பெண்ணிடம் பழகி வந்தது தெரிய வந்தது.

loading...