சூப்பர் சிங்கரில் டைட்டில் வென்ற மூக்குத்தி முருகன்... தொலைக்காட்சியை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை..!

Report
683Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கடந்த ஞாயிற்று கிழமை நிறைவடைந்த ரியாலிட்டி நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் சீனியர் 7.

இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுகிழமை கோயம்பத்தூரில் கொடீசியா அரங்கில் நடைபெற்றது.

நடுவர்களாக, அனுராதா ஸ்ரீராம், உன்னிக்கிருஷ்ணன், ஸ்வேதா மோகன், பென்னி தயால் ஆகியோர் இருந்த நிலையில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிரூத் உள்பட, பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், டாப் 5 போட்டியாளர்களாக விக்ரம், புண்யா, முருகன், சாம் விஷால் மற்றும் கெளதம் ஆகிய 5 தகுதி பெற்றிருந்தனர்.

இவர்கள் ஐவரில், யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்த நிலையில், பலரும் புண்யா வெற்றி பெறுவார் என்று சமூக வலைதளங்களில் வைரலாக்கி வந்தனர்.

ஆனால், இறுதியில், இதில், மூக்குத்தி முருகன் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். அவருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கூறியபடி அனிருத் இசையில் பாடும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு விக்ரமுக்கும் மூன்றாம் பரிசு சாம் விஷால் மற்றும் புண்யா இருவருக்கும் சேர்த்து வழங்கப்பட்டது.

இந்நிலையில், மூக்குத்தி முருகனுக்கு முதல்பரிசு கொடுக்கப்பட்டதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகை ஸ்ரீபிரியாவும் விஜய் தொலைக்காட்சியை கடுமையாக சாடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவினை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, விஜய் டிவி - சூப்பர் சிங்கர் பட்டம் எப்போதுமே பாடுவதில் திறமையானவருக்கு வழங்கப்படுவதில்லை என நம்புகிறேன்.

அந்த 5 போட்டியாளர்களில் புண்யாவும் விக்ரமும்தான் இசை ரீதியாக அற்புதத் திறமைகள். சத்யபிரகாஷ் வெற்றி பெறாத போதிலிருந்து போங்காட்டம் ஆரம்பமாகிவிட்டது. எப்போதாவது நியாயமா, சங்கீதத்தை மட்டும் கௌரவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

loading...