கவிலியா காதல் முறிவிற்கு சேரப்பா தான் காரணமா? அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மதுமிதா..!

Report
170Shares

பிக்பாஸ் போட்டியாளர்களான லாஸ்லியா மற்றும் கவின் காதல் முறிவு பற்றி முதன்முறையாக பிக்பாஸ் போட்டியாளரும், நடிகையுமான மதுமிதா கருத்து தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் மதுமிதா. ஆனால் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுடன் ஏற்பட்ட மோதலின் மூலம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இதனால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தது. அதனால் மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்டத்திற்கும் கூட பங்கேற்கவில்லை.

இந்நிலையில் சமீபத்தில், பேட்டியளித்த மதுமிதா, கவின் லாஸ்லியா காதலை பற்றி பேசியுள்ளார். அதில், இவர்கள் காதல் முறிவிற்கு சேரன் தான் காரணமா என ஒரு கேள்வி எழுப்ப, அதற்கு கவின் சாக்‌ஷி காதல் முறிவிற்கு யார் காரணம் என கடுமையாக பேசியுள்ளார்.

மேலும், நல்ல காதல்கள் வரவேற்க தான் படுகின்றன எனவும் பேசியுள்ளார். இந்த சீசனை பொறுத்த வரையில், கவிலியா காதலை பற்றி பிக்பாஸ் ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை என தகவலும் வெளியாகியது.

இதனால் இவர்கள் காதல் முறிந்துவிட்டதாக ஒரு பக்கம் கூறப்படுகிறது. இதற்கு சேரன் தான் முக்கிய காரணமாக இருப்பார் என்றும் சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது.